TAMIL
ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி-பெங்களூரு அணிகள் இன்று மோதல்
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி)-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன.
முதலில் இந்த போட்டி ரசிகர்களுக்கு அனுமதியின்றி பூட்டிய ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று செய்திகள் வெளியாயின.
ஆனால் தற்போது இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வழக்கமாக இரவு 7.30 மணிக்கும் தொடங்கும் இந்த போட்டி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருவதால் இந்த போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது