TAMIL
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தியது கோவா
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 34-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா அணி 1-0 என்ற கணக்கில் ஐதராபாத் எப்.சி.யை சாய்த்து 3-வது வெற்றியை பதிவு செய்தது. வெற்றிக்குரிய கோலை மாற்று ஆட்டக்காரர் மன்விர் சிங் 68-வது நிமிடத்தில் அடித்தார். ஜாம்ஷெட்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் சென்னையின் எப்.சி., ஜாம்ஷெட்பூர் அணியுடன் மோதுகிறது.