TAMIL
ஐபிஎல்-லில் மோசமான அணியான ஆர்.சி.பி மேற்கொண்ட மாற்றம்! லண்டனில் இருந்து கிண்டலடித்த விஜய்மல்லையா
ஐபிஎல் தொடரில் லோகோவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மாற்றியுள்ள நிலையில் அதற்கு ஒரு வித கிண்டலுடன் விஜய் மல்லையா பதிலளித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அணிகளில் முக்கியமான ஒரு அணி ஆர்.சி.பி. எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோஹ்லி தலைமையில் இந்த அணி விளையாடி வருகிறது.
கடும் முயற்சி செய்தாலும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாத அணியாக இருக்கிறது இந்த அணி.
இதனால் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதும் கூட வாடிக்கையாக இருக்கிறது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல். போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அனைத்து சமூக வலைத்தள கணக்குகளும் திடீர் மாற்றத்தை அண்மையில் சந்தித்தன.
குறிப்பாக, அந்த அணியின் பெயரிலிருந்த பெங்களூர் நீக்கப்பட்டு ராயல் சேலஞ்சர்ஸ் என மாற்றப்பட்டது.
ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தள கணக்குகளிலும் இந்த மாற்றம் வந்தது.
இதோடு ஆர்.சி.பி அணி தனது புதிய லோகோவை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த லோகோவில் சீறும் சிங்கத்தின் உருவம் இருக்கிறது.
இந்த மாற்றம் குறித்து ஆர்சிபியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், லோகோ அருமையாக உள்ளது, ஆனால் கோப்பையை வெல்லுங்கள் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
விஜய்மல்லையா இந்தியாவில் 9000 கோடிகளுக்கும் அதிகமான கடன்களை வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பி சென்றது குறிப்பிடத்தக்கது.
A new chapter begins #PlayBold #NewDecadeNewRCB pic.twitter.com/tUp46ISTDH
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 14, 2020