துபாயில் ஐபிஎல் கிரிக்கெட்டின் 18-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
அதிரடியாக தொடங்கிய இந்த ஜோடியில் மயங்க் அகர்வால் 26(19) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய மன்தீப்சிங் 27(16) ரன்களும், நிகோலஸ் பூரன் 33(17) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே,எல்.ராகுல், தனது அரைசதத்தை பதிவு செய்தநிலையில் 63(52) ரன்களில் கேட்ச் ஆனார்.
இறுதியில் மேக்ஸ்வெல் 11(7) ரன்களும், சர்ப்ரஸ் கான் 14(9) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 178 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 63 ரன்கள் எடுத்தார்.
சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.