சென்னை – சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் 10-வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து சுரேஷ் ரெய்னா களம் இறங்கினார். இந்த ஓவரின் கடைசி பந்தை லாங்-ஆன் திசையில் சிக்சருக்கு தூக்கினார்.
இந்த சிக்சர் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியில் சுரேஷ் ரெய்னா இணைந்துள்ளார். இந்திய வீரர்களில் ரோகித் சர்மா 222 சிக்சர்கள், எம்எஸ் டோனி 217 சிக்சர்கள், விராட் கோலி 204 சிக்சர்கள் அடித்துள்ளனர்.
இந்த போட்டியில் மேலும் 2 சிக்சர்கள் அடித்து 24 ரன்னில் ஆட்டம் இழந்தார். மொத்தம் 202 சிக்சர்கள் அடித்துள்ளார்.