துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 26வது ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசரஸ் ஐதராபாத் அணி மோதுகிறது.
இன்றைய ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ஜோஸ் பட்லர் (16), ஸ்டீவ் ஸ்மித் (5) அடுத்தடுத்து ஆட்டமிழக்க பென் ஸ்டோக்ஸ் (5), ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 26 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 26 ரன்களும், ராபின் உத்தப்பா 18 ரன்களும் அடித்தனர். கடைசி 8 ஓவரில் 81 ரன்கள் தேவை என்ற நிலையில் ரியான் பராக்வுடன் ஜோடி சேர்ந்த டெவாட்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் வெற்றிப்பாதைக்கு சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் நான்கு பந்துகளில் 6 ரன்கள் அடித்த ராஜஸ்தான், 5-வது பந்தில் சிக்ஸ் அடித்து ஒரு பந்து மீதமுள்ள நிலையில் அபார வெற்றி பெற்றது. ரியான் பராக் – ராகுல் டெவாட்டியா ஜோடி 85 ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தனர். பராக் 26 பந்தில் 42 ரன்களும், டெவாட்டியா 28 பந்தில் 45 ரன்களும் அடித்தனர். 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்விக்கு இந்த வெற்றி மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது ராஜஸ்தான் அணி.