இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலம் முடிவடைந்த நிலையில், சென்னை அணியில் இருக்கும் வீரர்கள் வாங்கும் சம்பள் விவரம் வெளியாகியுள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு, இந்தியாவில் உள்ளூர் தொடராக ஐபிஎல் போட்டி துவங்கியது. இதில் இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள், இளம் வீரர்கள் போன்றோர் ஏலத்தின் அடிப்படையில் எடுக்கப்படுவர்,
அப்படி 8 அணியினர் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் போட்டு கொண்டு எடுப்பர்.
தற்போது ஐபிஎல் தொடர் துவங்கி 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அடுத்தாண்டிற்கான ஐபிஎல் ஏலம் கடந்த 19 மற்றும் 20-ஆம் திகதி நடைபெற்றது.
இதில் சில எதிர்பார்க்காத வீரர்களை கோடிக்கணக்கில் கொடுத்து அணிகள் வாங்கியது.
அதில் குறிப்பாக சென்னை அணி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ்சாவ்லாவை 6.75 கோடி கொடுத்து வாங்கியது.
இதனால் சென்னை ரசிகர்கள் இவருக்கு போய் இவ்வளவு விலையா? என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இருக்கும் சென்னை அணியில் மொத்த வீரர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது.
இதில் உள்நாட்டு வீரர்கள் 16 வெளிநாட்டு வீரர்கள் 8 பேரும் உள்ளனர்.
அவர்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.