ஐபிஎல் தொடரில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் இசுரு உதானாவை மாதிரி ஏலத்தில் பெங்களூரு அணி 9 கோடி வரை வாங்குவது ஏன் என்பதற்கு விடை கிடைக்கும் வகையில், வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில், இலங்கை வீரர் இசுரு உதானாவை பெங்களூரு அணி, அவரின் ஆரம்ப விலையான 50 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது.
அதன் பின் பெங்களூரு அணி நிர்வாகிகள், பயிற்சியாளர் ஆகியோர் கலந்தாலோசித்த போது, அவரை எடுப்பதற்கு 9 கோடி வரை மாதிரி ஏலம் நடத்தினர்.
இந்த செய்தி கடந்த இரண்டு தினங்களாக சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இவரை ஏன் இவ்வளவு தொகை கொடுத்து பெங்களூரு அணி வாங்க நினைத்தது என்ற சந்தேகம் ரசிகர்கள் பலருக்கும் எழுந்தது.
இந்நிலையில் தற்போது உதானா வெளிநாட்டில் நடந்த டி20 தொடரில், தன்னுடைய அற்புதமான யார்க்கர் மூலக், கிறிஸ் கெய்ல் போன்ற அதிரடி வீரர்களை போல்டாக்கி பவுலியன் அனுப்புகிறார்.
இதை கவனித்த பெங்களூரு அணி நிர்வாகம் அவரை வாங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.