TAMIL
ஐசிசி தரவரிசை பட்டியலில் முன்னேறிய விராட் மற்றும் கே.எல்.ராகுல்!
ஐசிசி தரவரிசை பட்டியலில் டி20 துடுப்பாட்டகாரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் விராட் கோஹ்லியும், அதே நேரத்தில் கே.எல்.ராகுல் 6வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய தரவரிசையில், ராகுல் மூன்று இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார், கோஹ்லி ஐந்து இடங்கள் தாண்டி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
ராகுல் 56 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார் மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனால், வான்கடே மைதானத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகளில் 164 ரன்கள் எடுத்தார்.
இதற்கிடையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக கோஹ்லி 183 ரன்கள் குவித்து தொடரின் வீரராக அறிவிக்கப்பட்டார்.
ரோஹித் மற்றும் கோஹ்லி இருவரும் டி20 போட்டிகளில் ரன் அடித்தவர்களில் முன்னணியில் உள்ளனர், தற்போது தலா 2,633 ரன்கள் எடுத்துள்ளனர்.