CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ஐசிசி சாம்பியன்ஷிப் இறுதி போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுமா?

சர்வதேச கிரிக்கெட் வாரியம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முறையை அறிமுகப்படுத்தியது. 2019 முதல் 2021 வரை முன்னணி அணிகள் டெஸ்ட் தொடரில்களில் விளையாடும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் என அறிவிக்கப்பட்டது.
இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியை ஜூன் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது.
தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு – ஐசிசி-க்கும் இடையில் நிதி தொடர்பான ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லையாம். இதனால் லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து இறுதிப் போட்டி வேறு இடத்திற்கு மாற வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலில் பாயின்ட் அடிப்படையில் அணிகள் தரவரிசைப் படுத்தப்பட்டது. தற்போது பெற்ற வெற்றிகள் அடிப்படையில் சதவீதம் அடிப்படையில் தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. இதனால் 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.