6 ஆட்டங்களில் விளையாடி 5-ல் தோற்றுள்ள பஞ்சாப் அணி மிகுந்த நெருக்கடியில் தவிக்கிறது.
நடப்பு தொடரில் சதம் அடித்த இரு வீரர்களும் அந்த அணியில் தான் (ராகுல், மயங்க் அகர்வால்) உள்ளனர்.
ஆனாலும் ஒருசேர ஆட்டம் கிளிக் ஆகாததால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
இதுவரை ஆடாத ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்ல் இன்றைய ஆட்டத்தில் களம் காண வாய்ப்புள்ளது.
மேக்ஸ்வெல் (6 ஆட்டத்தில் 48 ரன்) ஜொலிக்காததும் பஞ்சாப்பின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
இந்த ஆட்டத்தில் இருந்து பஞ்சாப் எழுச்சி பெற்றால் சிக்கலில் இருந்து விடுபட முடியும்.
இல்லாவிட்டால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கேள்விக்குறி தான்.
கொல்கத்தா அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றி பெற்றிருக்கிறது.
கடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியதால் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள்.
கேப்டன் தினேஷ் கார்த்திக், ரஸ்செல், சுப்மான் கில், மோர்கன், ராணா, திரிபாதி என்று பேட்டிங்கில் அசுர பலத்துடன் தென்படும் கொல்கத்தா அணி ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் ஆயத்தமாகியுள்ளது.