TAMIL

என் மனைவிக்கு சமையலில் உதவுகிறேன்! குழந்தையுடன் அதிக நேரம் செலவிடுகிறேன்… மனம் திறந்த இந்திய அணி வீரர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்களும் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கொடுத்த பேட்டியில் கூறியதாவது, கொரோனா வைரஸ் தாக்கம் ஒருவேளை முடிந்து விட்டால் மீண்டும் ஆடுகளத்திற்கு வந்து ஆடுவது மிகவும் கடினமாக இருக்கும்.

வீரர்கள் மீண்டும் தயாராக கிட்டத்தட்ட குறைந்தது 4 வாரங்கள் ஆவது தேவைப்படும்.

வீட்டில் நான் தினமும் பயிற்சி செய்து வருகிறேன். நான் சிறு வயதிலிருந்தே ஜுடோவில் எனது திறனை வளர்த்துக் கொண்டேன். அதனால் அதனையும் செய்து வருகிறேன்.

வீட்டில் என் மனைவிக்கு சமையலில் உதவுகிறேன். எனது குழந்தையுடன் அதிக நேரத்தை செலவழிக்கிறேன்.

மறுபடியும் கிரிக்கெட் எப்போது ஆரம்பிக்கும் என்று தெரியாது. ஆனால் இனி பழைய முறைப்படி கிரிக்கெட் இருக்காது என்று நினைக்கிறேன்.

விக்கெட் விழுந்துவிட்டால் வீரர்கள் அனைவரும் ஒன்றாக கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாது. இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து தான் இனி மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டி இருக்கும்.

முந்தைய காலகட்டத்தில் விக்கெட் விழ்ந்தால் வீரர்கள் எல்லாம் தங்களது இடத்தில் நின்று கொண்டே உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள்.

இனி அந்த முறை நடைமுறைக்கு வரும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker