TAMIL
என் மகள் அப்படி செய்ததால் டிவியை அடித்து நொறுக்கினேன்! பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி கிண்டல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சையத் அப்ரிடி தனது மகள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது ஆரத்தி எடுத்ததைப் பார்த்து கோபத்தில், தொலைக்காட்சி செட்டை உடைத்தாக கூறியுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சையத் அப்ரிடி சர்ச்சைக்கு பெயர் போனவர் என்றே கூறலாம்.
சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெற அவர் தன்னுடைய சுயசரிதை மூலம் பல்வேறு விஷயங்களில் சர்ச்சையை கிளப்பினார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் இருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அப்ரிடி இந்து மத சடங்கான ஆரத்தி எடுப்பதை கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளார்.
அதில், தினந்தோறும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தனிமையில் பார்க்கும் படியும், குழந்தைகளுடன் பார்க்ககூடாது என அறிவுறுத்தியதாக கூறிய அவர்,
தொடர்ந்து இந்து மத சங்கான ஆரத்தி எடுக்கு முறையில் ஈடுபடுவது போல சைகை செய்து, அப்படி அவர் மகள் செய்த போது கோபத்தில் டிவி செட்டை உடைத்தாக கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்து மதம் காரணமாக தான் அசிங்கப்பட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியிருந்த நிலையில், அப்ரிடியின் இப்படி பேசியிருப்பது,
உண்மையில் இந்து டேன்ஷி கனேசியாவுக்கு இது நடந்திருக்கலாம் என்று ரசிகர்கள் சந்தேக கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
This is reality of secularism in Pakistan, TVs are broken for showing Hindu rituals & people applaud it pic.twitter.com/PXKcs5wcyf
— Amit Kumar Sindhi ?? (@AMIT_GUJJU) December 28, 2019