IPL TAMILNEWSTAMIL

எக்ஸ் மச்சி? ஒய் மச்சி? யெல்லோ மச்சி? ஸ்காட் ஸ்டைரிஸின் கணிப்பை கலாய்த்த சிஎஸ்கே!

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வரும் 9ம் தேதி முதல் துவங்க உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 10ம் தேதி நடக்கும் 2வது போட்டியில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் பெரிதும் சோபிக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ‘ப்ளே ஆஃப்’ சுற்றோடு வீடு திரும்பியது. எனவே இந்தாண்டு நடக்கவுள்ள தொடரில், கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளரும், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரருமான ‘ஸ்காட் ஸ்டைரிஸ்’, இந்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் எந்த அணி வெல்லும், எந்த அணி ‘ப்ளே ஆஃப்’ சுற்றுக்கு செல்லும் என்ற கணிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கேப்டன் தோனியின் தலைமையில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘ப்ளே ஆஃப்’ சுற்றுக்கு செல்லது எனவும், மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் கோப்பையை வெல்லும் எனவும், மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2ம் இடம் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது கணிப்பில், பஞ்சாப் அணியில் வலுவான வீரர்கள் உள்ளதால், அந்த அணி இந்த முறை 3வது இடம் பிடிக்கும் எனவும், ஐதராபாத் அணி 4வது இடத்தை பிடிக்கும் எனவும் பதிவிட்டுள்ளார். அதே வேளையில் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத பெங்களூர் அணி 5வது இடத்தையும், ராஜஸ்தான் அணி 6வது இடத்தையும் கொல்கத்தா அணி 7வது இடத்தையும் பிடிக்கும் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்காட்டின் இந்த கருத்து கணிப்பை பல அணிகளும் விமர்சனம் செய்தும், பதில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கருத்தையும் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், ஸ்காட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸியில் இருக்கும் பழைய புகைப்படத்தை பதிவிட்டு, எக்ஸ் மச்சி?… ஒய் மச்சி?… யெல்லோ மச்சி?…. (EX Machi, why?, yellow machi) என்று கேலி செய்துள்ளது.

இதற்கு பதில் ட்வீட் செய்துள்ள ஸ்காட், ‘நானே என்னை கண்டிப்பதாக கருதுகிறேன்’ என்றதோடு, மன்னிப்பு கேட்பது போல் ஒரு புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய முன்னாள் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker