TAMIL
உலக லெவன் அணியை எதிர்கொள்ளும் ஆசியா லெவன் அணி அறிவிப்பு..! கோஹ்லி.. மலிங்கா இடம்பிடித்தனர்
அடுத்த மாதம் வங்கதேசத்தின் , டாக்காவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 சர்வதேச தொடரில் டு பிளெசிஸ் தலைமையிலான உலக லெவன் அணியை எதிர்கொள்ள இந்திய கேப்டன் விராட் கோஹ்லி ஆசியா லெவன் அணியில் இடம் பிடித்தார்.
வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்படும்.
போட்டிகள் மார்ச் 18 முதல் 22 வரை நடைபெற உள்ளன.
கிறிஸ் கெய்ல், ரஷீத் கான், ரோஸ் டெய்லர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் உலக லெவன் அணிக்காக விளையாடுவார்கள் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன் உறுதிப்படுத்தினார்.
எனினும் இத்தொடரில் கோஹ்லி பங்கேற்பது பி.சி.சி.ஐ.யின் அனுமதிக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கோஹ்லியை தவிர, இந்திய வீரர்களான கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷாப் பந்த், சுழற்பந்து
வீச்சாளர் குல்தீப் யாதவ், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோரும் ஆசிய லெவன் அணியில் மூன்று போட்டிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராகுலும் ஒரு போட்டியில் மட்டும் கலந்து கொள்ளவுள்ளார்.
ஆசியா லெவன் அணியில் பாகிஸ்தான் வீரர் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த போட்டிக்கு பாகிஸ்தான் வீரர்கள் யாரும் அழைக்கப்பட மாட்டார்கள் என்று பி.சி.சி.ஐ இணைச் செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ் முன்னதாக கூறினார்.
ஆனால், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதால் பாகிஸ்தான் வீரர்கள் இத்தொடரில் பங்கேற்கவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியது.
ஆசியா லெவன் வீரர்கள் விபரம்:
கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரிஷாப் பந்த், குல்தீப் யாதவ், முகமது ஷமி, திசாரா பெரேரா, லசித் மலிங்கா, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், முஸ்தாபிஸூர் ரஹ்மான், தமீம் இக்பால், முஷ்பித் Lamichhane.
உலக லெவன் அணி வீரர்கள் விபரம்:
அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் கெய்ல், டு பிளெசிஸ் (அணித்தலைவர்), நிக்கோலஸ் பூரன், பிரெண்டன் டெய்லர், ஜானி பேர்ஸ்டோ,
கீரோன் பொல்லார்ட், ஆதில் ரஷீத், ஷெல்டன் கோட்ரெல், லுங்கி என்ஜிடி, ஆண்ட்ரூ டை, மிட்செல் மெக்லெனகன்.