TAMIL
உலக டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார், ரபெல் நடால்

உலக டென்னிஸ் வீரர்களின் ஒற்றையர் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (9,585 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 4-ந் தேதிக்கு பிறகு ரபெல் நடால் முதல்முறையாக நம்பர் ஒன் இடத்தை ஆக்கிரமித்து இருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் 8-வது முறையாக நடால் முதலிடத்தை தனதாக்கி இருக்கிறார். முதல் இடத்தில் இருந்த செர்பியா வீரர் ஜோகோவிச் (8,945 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 2-வது இடத்தை பெற்றுள்ளார்.