TAMIL
உலக இளையோர் செஸ் போட்டி; சென்னை வீரர் பிரக்யானந்தா தங்க பதக்கம் வென்றார்
உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10வது சுற்று ஆட்டத்தில், 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கிராண்ட்மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்யானந்தா (வயது 14), லிதுவேனியாவின் பாவ்லிஸ் பல்டினிவிசியசை எதிர்கொண்டார்.