TAMIL
உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வீரரை ‘மன்கட்’ செய்த ஆப்கானிஸ்தான் வீரர்..! குவியும் வெறுப்புகள்
தென் ஆப்பரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் துடுப்பாட்டகாரரரை ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் மன்கட் அவுட் செய்ததற்கு சமூக வலைதளங்களில் பலர் அதிப்தி கருத்து தெரிவித்துள்ளனர்.
பெனோனி மைதானத்தில் நடந்த காலிறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடி ஆப்கானிஸ்தான் அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்கள் எடுத்தது.
191 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கிய துடுப்பாடியது. 27வது ஓவரை ஆப்கான் பந்துவீச்சாளர் நூர் அகமது வீசினார்.
அப்போது, வந்து வீசுவதற்கு முன் க்ரீஸை விட்டு நகர்ந்த பாகிஸ்தான் ஆரம்ப துடுப்பாட்டகாரர் முஹம்மது ஹுரைராவை ‘மன்கட் அவுட்’ செய்தார்.
வீடியோவை ஆய்வு செய்த 3வது நடுவர் அவுட் என அறிவித்தார்.
சிறப்பாக விளையாடி வந்த ஹுரைரா 64 ஓட்டங்களில் நடையை கட்டினார்.
எனினும், சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணி இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது.
சிறப்பாக விளையாடி வந்த பாகிஸ்தான் வீரரை, ஆப்கான் வீரர் மன்கட் முறையில் அவுட் செய்ததை சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.
பிப்ரவரி 4ம் திகதி நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
6ம் திகதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நியூசிலாந்து-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
Thoughts? ? pic.twitter.com/0hvh48AZDu
— Wisden (@WisdenCricket) January 31, 2020