TAMIL
உலகக்கோப்பை இறுதி போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய வீரரின் மோசடி அம்பலம்! ஓராண்டு விளையாட தடை
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அசத்திய இந்திய வீரர் வயது மோசடியில் ஈடுபட்டது அம்பலமானதை தொடர்ந்து அவருக்கு ஓராண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மன்ஜோத் கல்ரா என்ற இளம் வீரர் 16 வயதினர் மற்றும் 19 வயதினருக்கான போட்டிகளில் தவறான பிறந்த நாள் குறிப்பை வைத்து ஆடியதை பிசிசிஐ கண்டறிந்துள்ளது.
இடது கை ஆட்டக்காரராக மன்ஜோத் கல்ரா 20 ஆண்டுகள் 351 நாட்களைக் கடந்தவர்.
இவர் கடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் சதமடித்து அசத்தினார்.
மன்ஜோத் கல்ரா ரஞ்சி போட்டியில் காயமடைந்த ஷிகர் தவானுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட இருந்த நிலையில் அவரின் வயது மோசடி தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து மன்ஜோத் கல்ரா ரஞ்சி போட்டிகளில் விளையாட ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.