FOOTBALLLATEST UPDATESNEWSTAMIL
உருகுவே கால்பந்து வீரர் சுவாரஸ் கொரோனாவால் பாதிப்பு

பிரபல கால்பந்து வீரர் லூயிஸ் சுவாரசுக்கு (உருகுவே) நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் உலக கோப்பை தகுதி சுற்றில் பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட முடியாது. அத்துடன் தனது கிளப்பான அட்லெடிகோ மாட்ரிட் அணிக்குரிய அடுத்த லீக்கிலும் பங்கேற்கமாட்டார். 32 வயதான சுவாரஸ் உருகுவே அணிக்காக அதிக கோல்கள் (116 ஆட்டத்தில் 63 கோல்) என்பது குறிப்பிடத்தக்கது.