TAMIL
உமர் அக்மல் மீது 2 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் உமர் அக்மலை, பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) போட்டியின் போது ஸ்பாட்பிக்சிங் என்ற சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அணுகிய விவகாரம் சர்ச்சையாக வெடித்தது.
ஆனால் இந்த விஷயத்தை கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்ல உமர் அக்மல் தவறி விட்டார்.
இதையடுத்து அவர் கடந்த மாதம் 20-ந்தேதி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
உமர் அக்மல் மீது ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக இரண்டு பிரிவுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.
விசாரணை முடிவில் அவர் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் 6 மாதங்கள் முதல் ஆயுட்கால தடை வரை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க உமர் அக்மலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
வருகிற 31-ந்தேதிக்குள் அவர் எழுத்துபூர்வமாக பதில் அளிக்க வேண்டும்.