IPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
உடல் பருமன்: விமர்சனத்திற்கு உள்ளான சென்னை, மும்பை அணி வீரர்கள்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். சுமார் ஐந்து மாதத்திற்குப் பிறகு கடந்த மாதம்தான் பயிற்சியை தொடங்கினார். அதற்குள் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றனர்.
நேற்று மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பேட்ஸ்மேன் சவுரப் திவாரி, சென்னை அணியின் பியூஷ் சாவ்லா ஆகியோர் உடல் பருமனுடன் காணப்பட்டனர்.
உலகத்தரம் வாய்ந்த லீக்கில் உடற்தகுதி இல்லாமல் இப்படியா? விளையாடுவார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
முன்னாள் இந்திய ஹாக்கி அணி குப்டன் விரேன் ரஸ்குய்னா கூறுகையில் ‘‘நான் தெருக்களில் விளையாடும் கிரிக்கெட்டை விட அதிகமான கிரிக்கெட் விளையாடவில்லை. ஆனால், ஐபிஎல் போட்டியில் வீரர்கள் உடற்தகுதி இல்லாமல் விளையாடியதை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. உடற்தகுதி சம்பந்தமான மற்றொரு விளையாட்டில் இந்த உடற்குதியின் வீரர்கள் விளையாடுவதை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை’’ என்றார்.
‘‘சில வீரர்களின் உடல் பருமனுடன் விளையாடியதை காண முடிந்தது’’ என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் ஐபிஎல் என்பதை ‘‘India Paunch League’’ என கிண்டல் அடித்துள்ளனர். டோனியின் உடல்வாகு பார்த்து ரசிகர் ஒருவர் ‘‘WWE-க்கு தயாரானதுபோல் இருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.