LATEST UPDATESNEWSTAMIL
இளைஞர் கழகங்களின் சம்மேளனம் புனரமைப்பு
இளைஞர் சேவைகள் மன்றத்தின் அட்டாளைச்சேனை இளைஞர் கழகங்களின் சம்மேளன நிர்வாக சபைத் தெரிவுக் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் பீ.எம்.றியாத் தலைமையில் பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.ஏ.நசீல், கல்முனை பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான எம்.ஏ.நபீல் பிரதம அதிதிகளாகவும் திருக்கோவில் ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி ஏ.எல்.அப்துல் ஹை மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும்,இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான றிஸ்லி முஸ்தபா,அம்பாறை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கங்கா சாதுரீக்க விசேட அதிதிகளாகவும் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் அலியார் முபாரக் அலி, அம்பாறை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நெஸ்க்கோ பொது முகாமையாளர் சிரிவர்த்தன,என்.எஸ் என்ஜினீரிங் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எம்.யூ.எம்.நியாஸ் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இதன் போது 2021 ஆம் ஆண்டுக்கு செயற்படும்வண்ணம் 21 பேர் கொண்ட நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதுடன் அட்டாளைச்சேனை பிர தேச சம்மேளனத் தலைவராக ஏ.எல்.எம்.சீத் தெரிவு செய்யப்பட்டார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து இளைஞர் கழக செயற்குழு உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்கில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கான பானம் பொதிகள் இதன்போது கல்முனை பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான எம்.ஏ.நபீலினால் உத்தியோகபூர்வமாக அம்பாறை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கங்கா சாதுரீக்கவிடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஒலுவில்,பாலமுனை,அட்டாளைச்சேனை பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட 30 மேற்பட்ட இளைஞர் கழகங்களில் பதவிவழி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.