IPL TAMILLATEST UPDATESNEWSTAMIL

இளம் வீரர்களான மவி, நாகர்கோட்டி பந்துவீச்சு அபாரமாக இருந்தது – தினேஷ் கார்த்திக் பாராட்டு

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி கொல்கத்தா அணி 2-வது வெற்றியை பெற்றது.

துபாயில் நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்தது.

சுப்மன்கில் 34 பந்தில் 47 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), மார்கன் 23 பந்தில் 34 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஆர்ச்சர் 2 விக்கெட்டும், ராஜ்பூத், உனட்கட், டாம் கரண், திவேதியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 37 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

டாம் கரண் அதிகபட்சமாக 36 பந்தில் 54 ரன் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். சஞ்சு சாம்சன், கேப்டன் ஸ்டீவ் சுமித் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஷிவம் மவி, நாகர்கோட்டி, வருன் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டும், சுனில் நரீன், கம்மின்ஸ், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

கொல்கத்தா பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி முதல் ஆட்டத்தில் மும்பையிடம் தோற்றது. 2-வது போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தியது. இந்த வெற்றி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

பல்வேறு வி‌ஷயங்கள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுப்மன் கில்,ரஸ்சல்,மார்கன் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள். இளம் வீரர்களான மவி, கமலேஷ் நாகர்கோட்டி அபாரமாக பந்து வீசினார்கள். நம்ப முடியாத வகையில் சிறப்பாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி முதல் 2 ஆட்டங்களில் சென்னை, பஞ்சாப்பை அணிகளை வீழ்த்தி இருந்தது.

இந்தத் தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் சுமித் கூறும்போது, எங்களது திட்டம் எடுபடவில்லை. ஆனால் 20 ஓவர் சில சமயம் இப்படி நடைபெறலாம். தொடக்கத்திலே விக்கெட் இழந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை 3-ந் தேதி சார்ஜாவில் சந்திக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை அதே தினத்தில் அபுதாபியில் எதிர்கொள்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker