TAMIL
இலங்கை வீரரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறிய இளம் பெண்: அவர் அளித்த அழகான பதிலின் புகைப்படம்
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் இளம் பெண் ரசிகை ஒருவர் இலங்கை வீரரை திருமணம் செய்ய விரும்புவதாக பாதகையை காட்டிய நிலையில், அதற்கு அந்த இலங்கை வீரர் அளித்த பதிலின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 16-ஆம் திகதியில் இருந்து Mzansi Super League என்ற டி20 போட்டி நடைபெற்றது, இந்த தொடர் தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வந்தன.
இந்நிலையில் குறித்த தொடரின் இறுதி ஆட்டத்தில் டூபிளிசிஸ் தலைமையிலான Paarl Rocks அணியும், டிவில்லியர்ஸ் தலைமையிலான Tshwane Spartans அணியும் மோதின.
இந்த போட்டி நேற்று Paarl-ல் இருக்கும் Eurolux Boland Park மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் Paarl Rocks அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இதையடுத்து இந்த போட்டியின் போது Paarl Rocks அணிக்காக விளையாடி வந்த இலங்கை அணியின் ஆல் ரவுண்டர் இசுரு உடனாவிற்கு, மைதானத்தில் இருந்த பெண் ரசிகை ஒருவர் அவரை திருமணம் செய்ய விரும்புவதாக பாதகையை காட்டினார்.
இதைக் கண்ட இசுரு உடனா உடனடியாக தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறி, திருமணத்திற்காக மோதிரம் போடப்படும் விரலை காண்பிடித்தார்.
இந்த புகைப்படத்தை இணையவாசி ஒருவர் சமூகவலைத்தளங்களில் பதிவிட, அழகாக பதில் அளித்துள்ளார் உடானா என்று அவரை பாராட்டி வருகின்றனர்.
#MSLT20 #MslT20Final fan moment @IAmIsuru17 very good answer I have allredy one ring pic.twitter.com/Us199QNi6K
— mohamed arsath (@BmArsath1) December 16, 2019