TAMIL
இலங்கை படுதோல்விக்கு இவர்கள் தான் பழியை ஏற்க வேண்டும்..! அணித்தலைவர் திமுத் அதிரடி
கராச்சியல் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி 263 ஓட்டங்கள் வித்தியாசத்தில்
படுதோல்வியடைந்ததற்கு மூத்த வீரர்கள் தான் பழியை ஏற்க வேண்டும் என அணித்தலைவர் திமுத் கருணரத்னே கூறியுள்ளார்.
பாகிஸ்தானு்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
ராவல்பிண்டியில் நடந்த முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், கராச்சி டெஸ்டில் அபார வெற்றிப்பெற்று பாகிஸ்தான் 1-0 என தொடரை கைப்பற்றியது.
தோல்விக்கு பின் பேசிய இலங்கை அணித்தலைவர் திமுத் கருணரத்னே கூறியதாவது, மற்ற தொடர்களில் மூத்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர், ஆனால் இந்த தொடரில், மூத்த வீரர்களாகிய நாங்கள் தான் பழியை ஏற்க வேண்டும்.
அணித்தலைவராக நானும் பழியைஏற்க வேண்டும். இந்த தொடரில் என்னால் பெரியதாக எதுவும் செய்ய முடியவில்லை.
மேத்யூஸ், தினேஷ் சண்டிமல் மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோராலும் அதிகமாக செயல்பாட முடியவில்லை. அவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த வீரர்கள்.
மூத்த வீரர்கள் பொறுப்பாக விளையாட தவறிவிட்டனர். இரண்டாவது இன்னிங்சில் பந்து வீச்சாளர்கள் பொறுமையிழந்தனர். மேலும் இலங்கை ஒரு நல்ல போட்டி நிலையை மிக எளிதாக கைவிட்டது.
குசால் நல்ல நுட்பத்துடன் விளையாடும் வீரர், ஆனால் அவர் திடீரென்று மோசமாக விளையாடுகிறார், பின்னர் திடீரென்று அவர் மீண்டும் நன்றாக விளையாடுகிறார்.
ஒரு தொடரை நன்றாக விளையாடுவது மற்றும் ஒரு தொடரை மோசமாக விளையாடுவது அணிக்கு கடினமானது.
ஒரு அணியில் இரண்டு துடுப்பாட்டகாரர்களும் சிறப்பாக விளையாட தவறினால் அது டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய குறைபாடு தான்.
அவர் இலங்கைக்குச் சென்று பயிற்சியாளர்கள் மற்றும் துடுப்பாட்ட ஆய்வாளர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.உயர் செயல்திறன் மையமும் உள்ளது.
அவர் தனது பலவீனங்களைச் சரிசெய்ய வேண்டும், ஏனென்றால் இந்தத் தொடரில் அவர் ஒரே பாணியில் அவுட்டாகிறார் என்பதை நாங்கள் கண்டோம் என திமுத் கருணரத்ன கூறினார்.