TAMIL
இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு! அவர் சொன்ன காரணம்
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான சச்சித்ரா சேனாநாயக்க அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சுழற்பந்து வீச்சாளரான சச்சித்ரா சேனாநாயக்க கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் கடைசியாக விளையாடினார்.
அதன் பின் இவர் எதிர்பார்த்த அளவிற்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
49 ஒருநாள் போட்டிகள், 24 டி20 போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 23 விக்கெட்டுகளையும், டி20-யில் 25 விக்கெட்டிகளை வீழ்த்திய இவர், டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் வீழ்த்தியதில்லை.
இந்நிலையில் இவர் அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறும் எனது முடிவை இலங்கை கிரிக்கெட்டுக்கு அறிவித்துள்ளேன்.
ஆனால் எதிர்காலத்தில் தேசிய அணிக்காக விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது எனக்குத் தெரியும். எனவே நான் விலக முடிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டில் இலங்கையின் டி 20 உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கு வகித்த 34 வயதான இவர், உள்நாட்டு சுற்றுகளில் தவறாமல் விளையாடி வருகிறார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 2013-ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.