இலங்கையை சேர்ந்த டோனி ரசிகர்கள் அவர் சர்வதேச அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடுவதை கொண்டாடும் வகையில் இரத்த தானம் அளித்துள்ளதோடு, முதியோர் இல்லத்துக்கு உணவுகளும் வழங்கியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி சர்வதேச அணிக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிறது.
இதை டோனி ரசிகர்கள் பல்வேறு விதமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் இலங்கையை சேர்ந்த டோனி ரசிகர்கள் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடியுள்ளனர்.
இதோடு மருத்துவமனையில் இரத்த தானமும் அளித்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
மேலும் டுவிட்டரில் #15YearsOfDhonism என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
Sri Lanka @MSDhoni fans Donating the BLOOD❣on the occasion of #15YearsOfDhonism Day ?? pic.twitter.com/dufoHLlTUX
— DHONIsm™ ❤️ (@DHONIism) December 22, 2019
SRI LANKA @MSDhoni Fans donated the Lunch to an oldage home on the occasion of #15YearsOfDhonism Day. ?❤️? pic.twitter.com/AvYdBoRE1U
— DHONIsm™ ❤️ (@DHONIism) December 22, 2019