TAMIL

இலங்கைக்கு நான் முக்கிய துவம் கொடுப்பதில்லையா? சர்ச்சை பதிவுக்கு ஜெயவர்த்தனே ஆவேச பதில்

இந்தியாவில் நடைபெற்று வரும் லெஜண்ட் தொடரில் நான் ஏன் விளையாடவில்லை என்பதற்கு முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்த்தனே விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் சாலபாதுகாப்பை மேம்படுத்துவதற்காக முன்னாள் வீரர்கள் கலந்து கொள்ளும் Road Safety World Series என்ற டி20 தொடர் நடைபெற்று வருகிறது.



இந்த தொடரில் இந்தியா, மேற்கிந்திய தீவு, இலங்கை, அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த ஜாம்பவான்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

நேற்று முன் நேற்று முன் தினம் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றது.

முன்னாள் வீரர்கள் கலந்து கொள்ளும் தொடர் என்பதால், மைதானத்திலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.

ஆனால் இலங்கை அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜாம்பவான்களான, மஹேல ஜெயவர்த்தனே, குமார் சங்ககாரா ஆகியோர் இல்லை.

இதனால் இலங்கை ரசிகர்கள் சிலர் இலங்கைக்கு முக்கிய துவம் கொடுப்பதில்லை என்பது போல் சமூகவலைத்தளங்களில் இரண்டு பேரின் புகைப்படங்களையும் பதிவிட்டு வைரலாக்கினர்.



இதைக் கண்ட ஜெயவர்த்தனே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இது இந்தியாவில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நடைபெறும் ஒரு கண்காட்சி போட்டியாகும், ஒரு சர்வதேச போட்டி அல்ல, இதில் விளையாடுவதற்கு மக்களிடம் பணம் பெறுகிறார்கள்.

இந்த தொடர் நடைபெற்று வரும் காலகட்டத்தில், எனக்கு தனிப்பட்ட முறையில், என்னுடைய குடும்பத்தினருடன் வேறு கடமைகள் இருந்தன, தவறாக வழிநடத்தப்பட்ட தகவல்கள் பதிவிடுவதை, இது அழிக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker