CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவாரா?: ரோகித் சர்மா பதில்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. காயத்தால் அவதிப்பட்ட அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் அவர் போட்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை.
தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால், பவுலிங் செய்யாமல் பேட்டிங் மட்டும் செய்து வருகிறார். இன்று இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஒருவேளை இந்த போட்டியில் மற்ற பந்து வீச்சாளர்களுக்கு பந்து எடுபடவில்லை என்றால், ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவாரா? என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்ட்யா சிறிய பிரச்சனையுடன் இருக்கிறார். அவர் பந்து வீசினால் சிறப்பானதாக இருக்கும். இந்தத் தொடர் முழுவதும் அவரது உடல்நிலையை பாதுகாத்து கொள்ளும் வகையில் பந்து வீசும் வாய்ப்பை அளிக்காமல் உள்ளோம். அவர் சிறப்பாக பேட்டிங் பணியை செய்து வருகிறார்.
நாங்கள் ஒரு வீரர் மீது அதிகப்படியான நெருக்கடியை கொடுக்க விரும்பமாட்டோம். இவர்களிடம் இருந்து எதிர்பார்க்கும்போது அதை அவர் செய்யவில்லை என்றால், அணியின் மனஉறுதிய குறைந்து விடும். அந்த சூழ்நிலையை நாங்கள் விரும்பவில்லை’’ என்றார்.