TAMIL
இரவு 7 மணிக்குப் பிறகு செல்போனைத் தொட வேண்டாம் – கெவின் பீட்டர்சன்
கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக உலகம் தொடர்ந்து போராடி வரும் நிலையில், முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இந்த தருணத்தில் தங்களை மனரீதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மக்களுக்காக சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
உங்களால் இதைக் கடைப்பிடிக்க முடியுமா எனப் பாருங்கள்:
1. தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
2. சமூகவலைத்தளங்களில் உள்ள எல்லாச் செய்தித்தளங்களையும் நீக்கிவிடுங்கள். அதேபோன்று எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்துவர்களையும். அவற்றைப் பார்க்கவேண்டும் என்கிற அவசியமில்லை.
3. இரவு 7 மணிக்குப் பிறகு காலையில் தூங்கி எழும் வரை செல்போனைத் தொட வேண்டாம். இவை எனக்குப் பலனளிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.