TAMIL

இன்ஸ்டாகிராம் விளையாட்டு: திணறிய அனுஷ்கா சர்மா; உதவிய விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். டெலிவிஷன் விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பில் முதல் முறையாக இருவரும் சந்தித்த போது காதல் ஏற்பட்டது.

முதலில் மறைமுகமாக இருந்த இந்த காதல் பின்னர் வெளிப்படையாக இருந்தது. 4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வரும் 3ம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் இந்த ஊரடங்கை கொண்டாடி வருகின்றனர்.

இவர்களின் கொண்டாட்டத்தை அறியும் வகையில் தினமும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில், இன்ஸ்டாகிராம் ஃபில்டரில் இருக்கும் வார்த்தை விளையாட்டு ஒன்றை அனுஷ்கா சர்மா முயற்சி செய்துள்ளார்.

ஆனால், சரியான வார்த்தையான ஸ்ட்ராங்கர் திங்கிஸ் என்பதை அனுஷ்கா சர்மாவால் கண்டுபிடிக்க முடியாமல் திணறி போனார்.

இதனை அறிந்த கேமராவுக்கு பின் பக்கம் இருந்த விராட் கோலி சரியான பதிலை கூறி அனுஷ்காவுக்கு உதவிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அமேசான் பிரைமில் வரும் மே 15ம் தேதி வெளியாகவுள்ள பட்டால் லாக் என்கிற வெப் சீரிஸ் டீசரை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கியுள்ளார். அனுஷ்கா ஷர்மா, தயாரிப்பில் வெப் சீரிஸ் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker