TAMIL

இன்னும் 5 முதல் 7 ஆண்டுகள் என்னால் விளையாட முடியும்: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்சிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் மீது குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

பின்னர், இந்தத் த‌டைக் காலம் ஏழு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. ஸ்ரீசாந்தின் தடைக்காலம் இன்றோடு நிறைவடைகிறது.

தடைக்குப் பின் உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆவலாக இருப்பதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். ஸ்ரீசாந்த் உடல்தகுதியை எட்டும் பொருட்டு, அவரது சொந்த மாநிலமான கேரளாவிற்காக ரஞ்சித் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரீசாந்த், “என் மீது தற்போது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. நான் அதிகம் நேசிக்கும் விளையாட்டை மீண்டும் ஆட போகிறேன்.

ஒவ்வொரு பநதையும் என்னால் முடிந்த அளவு சிறப்பாக வீசுவேன்.

அதிகபட்சமாக இன்னும் 5 முதல் 7 ஆண்டுகள் மட்டுமே விளையாட முடியும். எந்த அணிக்காக விளையாடினாலும் என் முழு திறனையும் வெளிப்படுத்தி விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker