TAMIL
இன்னும் இந்தியர்கள் என்னை மன்னிக்கவில்லை: அவுஸ்திரேலிய வீரர் மெக்ரத் சொன்ன தகவல்
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மெக்ரான், இந்திய வீரர்கள் இன்று வரை என்னை மன்னிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியா அணி, ஒரு கட்டத்தில் அபாயகரமாக அணியாக இருந்த போது, அந்தணிக்கு கடும் சவால் கொடுக்கும் அணியாக இருந்தது.
குறிப்பாக இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரை அவுட்டாக்குவதில் அவுஸ்திரேலிய அணியினர் பல திட்டங்களை வைத்திருப்பர்.
இருப்பினும் சச்சின், லட்சுமணன், டிராவிட் போன்றோர் அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்தனர்.
இந்நிலையில் அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரான மெக்ராத் கடந்த 2003-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில், நான் சச்சினை அவுட்டாக்கியதால், இந்திய ரசிகர்கள் இன்னும் என்னை மன்னிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் இடையே சிறப்பாக கிரிக்கெட் சண்டை நடைபெற்றுள்ளது.
தற்போது நான் இந்தியாவில் அதிகமான நேரத்தை செலவழித்து வருகிறேன்.
இந்தியா எனக்கு 2-வது சொந்த வீடு என்று கூட கூறலாம். இங்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர்.
ஆனால், 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சினை அவுட்டாக்கியதற்காக இங்குள்ளவர்கள் நாங்கள் இன்னும் உங்களை மன்னிக்கவில்லை என்று கூறி வருவதாக தெரிவித்துள்ளார்.