TAMIL
இன்சமாம் உல் ஹக் சாதனையை முறியடித்த ஸ்டீவன் சுமித்
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது.
இதில் ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 68.5 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதில் சிறப்பாக விளையாடிய ஸ்டீவன் சுமித் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் ஒரு அணிக்கு (இங்கிலாந்து) எதிராக தொடர்ந்து 10 அரைசதங்களை அடித்து ஸ்டீவன் சுமித் சாதனை படைத்துள்ளார். எனவே இதற்கு முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 9 அரைசதங்களை அடித்த இன்சமாம் உல் ஹக் சாதனையை ஸ்டீவன் சுமித் முறியடித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்து அணி 78 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.