TAMIL
இந்த முறை ஐ.பி.எல் கோப்பையை கண்டிப்பா ஜெயிக்கனும்… டோனி எடுத்த வைத்த முதல் அடி
ஐபிஎல் போட்டி தொடர் துவங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், டோனி தனக்கு பிடித்த கடவுளின் கோவிலுக்கு சென்றுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் துவங்க இன்னும் சில மாதங்களே உள்ளது.
சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் டோனியை, அனைவரும் ஐபிஎல்லில் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். ஐபிஎல்லில் டோனியின் ஆட்டத்தை பொறுத்தே, அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இருப்பாரா? இல்லையா? என்பது முடிவு செய்யப்படும் என்ற தகவலும் வந்து கொண்டு இருக்கின்றன.
இதற்காக டோனியும் ராஞ்சியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் டோனி, சமீபத்தில் ராஞ்சியில் இருக்கும் தியோரி கோவிலுக்கு சென்றுள்ளா. அங்கிருக்கும் துர்க்கை அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக பார்க்கப்படுகிறது. டோனி அந்த அம்மனின் தீவிர பக்தர்.
அந்த வகையில் கோவிலுக்கு சென்ற டோனி, அம்மனுக்கு காணிக்கை செலுத்தினார், கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை அணி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முன்பு, டோனி குறித்த கோவிலுக்கு சென்று அம்மனுக்கு காணிக்கை செலுத்தினார்.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கெதிரான தொடருக்கு முன்பு, டோனி அம்மனை வழிபட்டு சென்றார்.
இதனால் ஐபிஎல் கோப்பை வெல்வதற்கு டோனி வைத்த முதல் அடி இது தான் என்று அவருடைய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.