TAMIL
இந்த பெயரை நினைவில் கொள்ளுங்கள்.. உலகின் மிக மதிப்புமிக்க 10 வீரர்களில் ஒருவராவார்.! இலங்கை பயிற்சியாளர் புகழ்ந்த இளம் வீரர்
22 வயதான ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா அடுத்த சில மாதங்களுக்குள் அணியின் மிக வெற்றிகரமான வீரராக இருப்பார் என்று இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கணக்கிட்டுள்ளார்.
ஹசரங்கா இதுவரை 15 ஒரு நாள் மற்றும் 13 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2017-ல் காலி மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்குஎதிராக சர்வதேச அளவில் அறிமுகமான வனிந்து ஹசரங்கா, ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த மூன்றாவது அறிமுக வீரர் என்ற சாதனை படைத்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
ஹசரங்கா கோட்டிற்குள் பந்து வீசும் திறன் மற்றும் நீளத்தின் கட்டுப்பாடு விதிவிலக்கானது மற்றும் உண்மையில் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரர்.
அவரால் துடுப்பாட மற்றும் பீல்டிங்கில் அசத்த முடியும் , எனவே 3 திறன்களையும் கொண்ட மற்றும் இலங்கைக்கு போட்டியை வெல்லும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹசரங்கா.
அடுத்த ஆண்டு உலகின் மிக மதிப்புமிக்க 10 வீரர்களில் அவர் ஒருவராக இருப்பார் என்று நினைக்கிறேன். அவரது முன்னேற்றத்தைப் பாருங்கள். பெயரை நினைவில் கொள்ளுங்கள் என ஆர்தர் கூறியுள்ளார்.
இலங்கையின் தலைமை தேர்வாளர் அசாந்தா டி மெலும் வனிந்து ஹசரங்காவின் திறமையைப் பாராட்டியுள்ளார்.