TAMIL
இந்திய வீரர்களுக்காக புத்தம் புதிய ஹொட்டல்: அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அழைப்பு
வருகிற அக்டோபர் மாதம் திட்டமிட்டிருந்த இந்தியா- அவுஸ்திரேலியா தொடரை நடத்த கிரிக்கெட் வாரியம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா அச்சத்தால் மார்ச் 13ம் திகதிக்கு பின்னர் எந்தவொரு சர்வதேச போட்டியும் நடைபெறவில்லை.
இந்தியாவில் ஏப்ரலில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலககிண்ணத்தொடர் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இத்தொடருக்கு பின்னர் இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட திட்டமிட்டிருந்தது.
இந்த தொடர் ரத்தானால் பெரும் நஷ்டம் ஏற்படும், எனவே கிரிக்கெட் போட்டிகளை எந்தவித தடையும் இல்லாமல் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்திய அணி வீரர்கள் மட்டும் தங்குவதற்காக புத்தம் புதிய ஹொட்டல் ஒன்று தயாராக இருக்கிறதாம்.
இந்த ஹொட்டல் மட்டுமின்றி கங்காரூ தீவு மற்றும் ரோட்நெஸ்ட் தீவு ஆகிய இடங்களிலும் மற்ற அணி கிரிக்கெட் வீரர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
எனினும் அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டே எந்த முடிவும் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.