TAMIL

இந்திய மகளிர் அணியை எந்த எதிரணியும் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை – மிதாலிராஜ்

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரிய மிதாலிராஜ் 89 ஆட்டங்களில் விளையாடி 17 அரைசதம் உள்பட 2,364 ரன்கள் (சராசரி 37.52) சேர்த்துள்ளார். இதில் 32 ஆட்டங்களுக்கு கேப்டனாக பணியாற்றியதும் அடங்கும்.

அத்துடன் மிதாலிராஜ் 203 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 7 சதம் உளபட 6,720 ரன்கள் குவித்தார்.

இவர் கடந்த ஆண்டும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனையும், ஒரு நாள் போட்டி அணிக்கான கேப்டனுமான மிதாலிராஜ், 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்தநிலையில் ஒரு பேட்டியில் மிதாலிராஜ் கூறியதாவது:-

இந்திய மகளிர் அணியை முன்பு போல யாரும் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை. தங்களை நன்குத் தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறார்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவையும் டி20யில் இங்கிலாந்தையும் வீழ்த்தி இதர அணிகளுக்குச் சவாலை ஏற்படுத்தியுள்ளோம். இதன்மூலம் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும் ஊரடங்குச் சமயத்தில் பயிற்சி எடுத்துக்கொள்வது பற்றி கூறுகையில்,

எல்லோராலும் சுலபமாகப் பயிற்சிகள் எடுக்க முடிவதில்லை. அவரவருக்கு உள்ள இடத்துக்கு ஏற்றவாறு பயிற்சிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

பயிற்சியாளர் ராமன் சார் அதற்குரிய வித்தியாசமான யோசனைகளைக் கூறி வருகிறார்.

என்னதான் உள் அரங்கில் பயிற்சி எடுத்தாலும் மைதானத்தில் பயிற்சி எடுப்பது போல வராது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker