CRICKETLATEST UPDATESNEWSTAMIL
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் சென்ற கார் விபத்தில் சிக்கியது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான முகமது அசாருதீன் ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரில் அசாரூதினுடன் 3 பேர் இருந்தனர்.
ரந்தம்போர் என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் தறிகெட்டு ஓடிய கார் சாலையோரம் இருந்த உணவு கடை மீது மோதி விபத்துக்குள்ளானது. எனினும் இந்த விபத்தில் அசாருதீன் மற்றும் அவருடன் இருந்த 3 பேரும் காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதேசமயம் உணவு கடையின் ஊழியர் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அசாருதீன் உள்பட 4 பேரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் 4 பேரும் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பினர். அதனைத் தொடர்ந்து அசாருதீன் மற்றொரு காரில் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றார்.