TAMIL
இந்திய அணியில் மாற்றம்..! ஒரு நாள் அணியிலிருந்து வெளியேறினார் நட்சத்திர பந்து வீச்சாளர்
இடுப்பு காயத்துடன் வெளியேறிய புவனேஷ்வர் குமாருக்கு மாற்றாக, மேற்கிந்திய தீவுகளுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை மும்பையில் நடந்த இறுதி டி-20 போட்டியின் பின்னர் புவனேஷ்வர் தனது வலது இடுப்பில் வலி இருப்பதாக புகார் கூறினார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் டிசம்பர் 14 வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அவருக்கு நிபுணரால் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் நடத்தப்பட்டது மற்றும் பி.சி.சி.ஐ மருத்துவக் குழு, புவனேஷ்வர் குமாருக்கு குடலிறக்க அறிகுறிகள் மீண்டும் தோன்றியிருப்பதைக் கண்டறிந்தன.
இப்போது நிபுணரின் கருத்து கோரப்படும், அதன்படி அவரது மேலாண்மைத் திட்டம் முடிவு செய்யப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும், ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷர்துல் தாகூர், கடைசியாக இந்தியாவுக்காக 50 ஓவர் போட்டியில் 2018 செப்டம்பர் மாதம் ஹாங்காங்கிற்கு எதிராக விளையாடினார்.
மும்பை வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் 36.33 சராசரியாக ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சமீபத்தில் முடிவடைந்த டி-20 தொடரில் இடம்பெற்ற தீபக் சாஹர் மற்றும் முகமது ஷமி ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மற்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர்.
இந்திய அணி அணி:
விராட் கோஹ்லி (தலைவர்), ரோகித் சர்மா (துணைத்தலைவர்), மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ்
பாண்டே, ரிஷாப் பந்த், சிவம் துபே, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் முகமது ஷமி, ஷார்துல் தாக்கூர்.