CRICKETLATEST UPDATESNEWSTAMIL
இந்திய அணியில் இவங்க 2 பேரும் மீண்டும் வந்துட்டா… உலககோப்பை அவங்களுக்கு தான்: மைக்கல் வாகன் உறுதி
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன், இந்திய அணிக்கு உலகக்கோப்பை வெல்வதற்கு பெரிய அளவில், வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த ஐந்து டி20 போட்டிகளில், இந்திய அணி 3-2 என்று தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
டி20 போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கும் இரு அணிகளும் மோதிக் கொண்ட இந்த தொடர் மிகவும் பரபரப்பாக இருந்தது.
இந்த தொடரில் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் திருமணம் காரணமாக ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோர் இடம் பெறவில்லை.
இது குறித்து மைக்கல் வாகன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்தியா இந்த தொடரை சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.
ஒரு சிறந்த அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி உள்ளது. பும்ராவும், ஜடேஜாவும் இந்திய அணியில் இணையும் போது இந்திய சூழ்நிலையில் அவர்கள் உலக கோப்பையை வெல்வதற்கு அது பெரிய அளவில் சாதகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.