TAMIL
இந்திய அணியில் இருந்து ரிஷாப் பண்ட், கில் விடுவிப்பு
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த 2-வது விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், மாற்று தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் ஆகியோர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டில் நடந்து வரும் சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்காக ரிஷாப் பண்டும், பஞ்சாப் அணிக்காக சுப்மான் கில்லும் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு காயம் எதுவும் ஏற்பட்டால் உடனடியாக களம் இறங்க ஏதுவாக ஆந்திராவை சேர்ந்த விக்கெட் கீப்பர் கோனா ஸ்ரீகர் பரத்தை இந்திய அணியினருடன் இணையும் படி தேர்வு குழு பணித்து இருக்கிறது.