TAMIL

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்; ஆட்டத்தின் நடுவே மைதானத்திற்குள் புகுந்த நாய்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தததையடுத்து இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.



போட்டியின் 26 ஆவது ஓவரின் போது ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய இருந்த நேரத்தில் திடீரென எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று மைதானத்திற்குள் புகுந்தது.

முதலில் பவுண்டரி லைனுக்கு வெளியே சுற்றித்திரிந்த அந்த நாய் பின்னர் மைதானத்திற்கு உள்ளே புகுந்து ஓடத் தொடங்கியது. இதனைக் கண்டு பார்வையாளர்கள் ஆரவாரம் செய்யத் தொடங்கினர்.



பின்னர் ஒருவழியாக அந்த நாய் அங்கிருந்த பார்வையாளர் பகுதி வாசல் வழியாக ஓடி மறைந்தது. இதனால் சிறிது நேரம் போட்டி தடைபட்டது.

மைதானத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புகளை மீறி, நாய் ஒன்று போட்டியின் நடுவே உள்ளே புகுந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker