TAMIL

இந்தியா, வங்காளதேச அணியினருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நன்றி

* காற்று மாசுக்கு மத்தியில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்தது. கடினமான சூழலை பொருட்படுத்தாமல் இந்த போட்டியில் விளையாடிய இந்தியா, வங்காளதேச அணியினருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நன்றி தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

* இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் வருகிற 29, 30-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் விளையாடாத கேப்டனாக முன்னாள் வீரரும், தேசிய டென்னிஸ் சம்மேளன தேர்வு குழு தலைவருமான ரோகித் ராஜ்பால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘தேர்வாளர்கள் பணி எளிதானது அல்ல. தேசிய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களாக சிறந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். வீரர்கள் நலனை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். வீரர்கள் குறித்து விமர்சனம் செய்வதை தவிர்த்து இக்கட்டான தருணத்தில் வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

* இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. மஹா புயல் வருகிற 6-ந் தேதி குஜராத்தில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும், அப்போது வேகமாக காற்று வீசுவதுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் புயல் மழை காரணமாக ராஜ்கோட்டில் நடைபெற இருக்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

* சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஸ்ஹோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து இந்திய வீரர் ஸ்ரீகாந்த் விலகி இருக்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் களம் காணுகிறார்கள்.


Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker