TAMIL
இந்தியா-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது ரஹானே சதம் அடித்தார்
முதலில் ஆடிய நியூசிலாந்து ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
டேரில் மிட்செல் 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
முன்னதாக மழை காரணமாக 2-வது நாள் ஆட்டம் நடைபெறவில்லை.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய ‘ஏ’ அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 53 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து இருந்தது.
சுப்மான் கில் 107 ரன்னுடனும், புஜாரா 52 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.
தொடர்ந்து ஆடிய புஜாரா 53 ரன்னிலும், சுப்மான் கில் 136 ரன்னிலும், விஜய் சங்கர் 66 ரன்னிலும், விக்கெட் கீப்பர் சிகார் பரத் 22 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
முதல் இன்னிங்சில் இந்திய ‘ஏ’ அணி 109.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 467 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் போட்டி டிராவில் முடித்து கொள்ளப்பட்டது.
சதம் அடித்த ரஹானே 101 ரன்னுடனும், ஆர்.அஸ்வின் 1 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
முதலாவது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.