TAMIL
இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 2 மற்றும் 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் 5000-க்கும் மேற்பட்டோரின் உயிரை குடித்துள்ளது.
இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் பரவலாக காணப்படுகிறது.
இதையொட்டி பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா பீதி விளையாட்டு போட்டிகளையும் விட்டுவைக்கவில்லை.
இந்திய ஓபன் கோல்ப், பெடரேசன் கோப்பைக்கான தேசிய ஜூனியர் தடகளம், கொல்கத்தாவில் நடக்க இருந்த இந்தியா-ஆப்கானிஸ்தான் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று, டெல்லியில் நடக்க இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி முழுமையாக ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட தகவலின்படி,
மார்ச் 15-ம் தேதி லக்னோவிலும், மார்ச் 18-ம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெற இருந்த இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 2 மற்றும் 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுகிறது.
முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் மீதமுள்ள 2 போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மீதமுள்ள 2 ஒருநாள் போட்டிகளும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.