TAMIL
இந்தியா-இலங்கை மோதும் 2வது டி-20 போட்டியிலும் சிக்கல் ஏற்படுமா? வெளியானது தகவல்
இந்தியா-இலங்கை மோதும் 2வது டி-20 போட்டி நாளை ஜனவரி 7ம் திகதி இந்தூர் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் காலநிலை தொடர்பில் வானிலை முன்னறிவிப்பு தகவல் வெளியாகியுள்ளது.
3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாட இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
கவுகாத்தியில் நடைபெறவிருந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இது ஆவலுடன் இருந்த இரு நாட்டு ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
கவுகாத்தி மைதானத்தை உலர வைக்க அயன் ஃபாக்ஸ், ஹேர் டிரையர் உள்ளிட்டவை பயன்படுத்தியது சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், Accuweather-ன் வானிலை முன்னறிவிப்பு படி, நாளை இந்தூரில் மழைப்பொழிவுக்கான வாய்ப்புகள் இல்லை என்பதை காட்டுகிறது.
மேலும், வெப்பநிலை 20-23 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும், போட்டியின் போது வெப்பநிலை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில், 2வது டி-20 போட்டியில் இரு அணிகளும் முதல் வெற்றிப்பெற கடுமையாக போராடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.