TAMIL
இந்தியா-இலங்கை இரண்டாவது 20 ஓவர் போட்டி: இந்திய அணி அபார வெற்றி
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற இருந்த முதல் ஆட்டம், மழையினால் ஆடுகளம் பாதிக்கப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடைபெற்றது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.
இதனையடுது களம் இறங்கிய இந்திய அணி 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ராகுல் 45, ஸ்ரேயஸ் ஐயர் 34, தவான் 32, கோலி 30 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் 3, நவ்தீப் சைனி 2, குல்தீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலங்கை அணியில் அதிகபட்சமாக குஷால் பெர்ரேரா 34, அவிஷ்கா பெர்னாண்டோ 22 ரன்கள் சேர்த்தனர்.