CRICKETLATEST UPDATESNEWSTAMIL
இந்தியா -ஆஸ்திரேலியா மோதும் 100-வது டெஸ்ட்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதிய டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கு இடையேயான 100-வது போட்டியாகும். இரு அணிகள் மோதிய டெஸ்ட போட்டியில் இது 7-வது அதிகபட்சமாகும். ஒரு அணியுடன் இந்தியா 2-வது முறையாக 100-வது டெஸ்டில் விளையாடுகிறது. இங்கிலாந்துடன் 122 டெஸ்டில் விளையாடி உள்ளது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் அதிகபட்சமாக 351 டெஸ்டில் மோதி உள்ளன. அதற்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் 160 டெஸ்டில் விளையாடி உள்ளன. இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா 153 டெஸ்டிலும், இந்தியா -இங்கிலாந்து 122 டெஸ்டிலும், ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் 116 டெஸ்டிலும், இங்கிலாந்து-நியூசிலாந்து 105 டெஸ்டிலும் மோதியுள்ளன.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்டில் இந்தியா 28-ல், ஆஸ்திரேலியா 43-ல் வெற்றி பெற்றுள்ளன. 27 டெஸ்ட் டிரா ஆனது. ஒரு போட்டி டையில் முடிந்தது.
இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1947-ம் ஆண்டு முதல் டெஸ்டில் விளையாடியது. அப்போது லாலாஅமர்நாத் கேப்டனாக இருந்தார். 25-வது டெஸ்டுக்கு பட்டோடியும், 50-வது டெஸ்டுக்கு அசாருதீனும், 75-வது டெஸ்டுக்கு கும்ப்ளேயும் கேப்டனாக பணியாற்றினர். தற்போது 100-வது டெஸ்டில் ரகானே கேப்டனாக உள்ளார்.